அழகிய காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட இளைஞன் : வெளியான காரணம்!!

550

காதலியுடன் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

இந்தியாவில் காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காததால், காதல் ஜோடியினர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் அங்கு கான்ஸ்டேபிளாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் கடந்த சில ஆண்டுகளாக சபிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் தங்களின் காதல் குறித்து பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர்களின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காததால், மிகவும் விரக்தியடைந்த காதல் ஜோடி, இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.