5 குழந்தைகளை கொன்ற கணவன் : சாட்சியளித்த போது நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்!!

1177

நீதிமன்றத்திலே கதறி அழுத தாய்

அமெரிக்காவில் தன்னுடைய 5 குழந்தைகளை கொலை செய்த, முன்னாள் கணவனுக்கு எதிராக சாட்சியளித்த தாய் நீதிமன்றத்திலே கதறி அழுதுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஆம்பர் கேசர் என்பவருக்கும், அவருடைய முன்னாள் கணவன் டிமோதி ஜோன்ஸ் (37) என்பவருக்கும் 5 குழந்தைகள் இருந்தனர்.

ஆம்பர் வேறு ஒருவருடன் காதலில் இருப்பதை தெரிந்துகொண்ட டிமோதி, மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தனியாக சென்றுள்ளார்.

2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Nahtahn (6) என்கிற தன்னுடைய மகனை மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவன், மின்சார வயரை கையில் பிடிங்கி கொண்டுவந்துள்ளான்.

இதனை பார்த்து ஆத்திரமடைந்த ஜோன்ஸ், தன்னை கொலை செய்துவிடுவானோ என்கிற அச்சத்தில் அவனை கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து மேரா (8) மற்றும் எலியாஸ் (7) ஆகியோரை கையால் கழுத்தை நெரித்தும், இரண்டு வயதான கேப்ரியல் மற்றும் ஒரு வயதான அபிகாயில் ஆகியோரை ஒரு பெல்ட் கொண்டு கழுத்தை நெரித்தும் கொலை செய்தார்.

பின்னர் அவர்களுடைய உடல்களை காரில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்றுகொண்டிருந்துள்ளார். வழியில் அவருடைய காரை நிறுத்திய பொலிஸார், துர்நாற்றத்தை அறிந்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.

உள்ளே குழந்தைகளின் சடலங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் உடனடியாக கைது செய்தனர். இந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதற்கான சாட்சியங்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

6 நாளான இன்று குழந்தைகளின் தாய் ஆம்பர் கேசர், விவாகரத்து பெற்ற சமயத்தில் கடைசி மகளுக்கு தான் எழுதிய கடிதம் ஒன்றினை நீதிமன்றத்தில் வாசிக்க ஆரம்பித்தார்.

அதனை ஆரம்பித்த சில வினாடிகளில் நீதிமன்றத்தில் கதறி அழ ஆரம்பித்துள்ளார். உடனே நீதிபதி அந்த பெண்ணை அழைத்துசெல்லுமாறு கூறி சிறிது இடைவெளி விட்டு பின்னர் மீண்டும் விசாரணையை ஆரம்பித்தார்.

ஆனால் இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ், எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சாதாரண முகத்துடனே நீதிமன்றத்தில் அமர்ந்திருந்துள்ளார்.

இதற்கிடையில் ஜோன்ஸ் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டாலும், ஜோன்ஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் மீதான மரண தண்டனையை ரத்து செய்யுமாறும் கூறியுள்ளார்.