தேர்தலில் வெற்றி பெற்ற கூலித்தொழிலாளியின் மகள் : குவியும் வாழ்த்து மழை!!

1668

கூலித்தொழிலாளியின் மகள்

கேரளா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த கூலித்தொழிலாளியின் மகள் ரம்யாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான ரம்யா ஹரிதாஸ், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

அப்போது இவருடைய திறமையை பார்த்து ஆச்சரியமடைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, ரம்யாவை தன்னுடைய கட்சியில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

பாடல் மற்றும் நாடக கலைஞரான ரம்யா எளிதாக அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே பிரபலமடைந்துள்ளார். இது அப்பகுதியை சேர்ந்த இடதுசாரி கட்சியினருக்கு தலைவலி கொடுக்க ஆரம்பித்தது. ரம்யா மீது பாலியல் ரீதியிலான கருத்துமோதல்களை எதிர்க்கட்சியினர் திணிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி அலத்தூர் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரம்யா போட்டியிட்டார். அத்தொகுதியில் அசைக்க முடியாத வேட்பாளராக வலம்வந்த இடதுசாரி கட்சியின் P.K. Biju-வை, 5,33,815 வாக்குகள் பெற்று தோற்கடித்துள்ளார்.

இந்த வெற்றியானது எதிர்கட்சியினருக்கு அதிர்ச்சியையும், பொதுமக்களுக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கேரளா மாநிலத்தில் 1971க்கு பிறகு மக்களவை தேர்தலில் வெற்றி பெரும் தலித் பெண் ரம்யா ஹரிதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.