109மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட குழந்தை : பின்னர் நடந்த சோகம்!!

961

நடந்த சோகம்

பஞ்சாப்பில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது ஆண்குழந்தை, 109 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், அவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sangrur மாவட்டத்தின் பகவான்புரா கிராமத்தில், 2 வயது குழந்தை ஃபதேவீர் சிங், கடந்த 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். அருகில் 7 அங்குல அகலம் மட்டுமே கொண்ட ஆழ்துளைக் கிணறு துணியால் மூடிவைக்கப்பட்டிருந்த நிலையில், கவன குறைவில் குழந்தை விழுந்துவிடவே, தாய் காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால் ஆழ்துளைக் கிணற்றுக்குள் 125 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட குழந்தையை மீட்க, தொடர்ந்து 5 நாட்களாக முயற்சி நடைபெற்றது. அந்த குழந்தைக்க உணவோ தண்ணீரோ வழங்க முடியாத நிலையில் ஆக்சிஜன் மட்டும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 109 மணி நேரத்திற்குப் பிறகு இன்று அதிகாலை(11.06.2019) 5.30 மணியளவில் ஃபதேவீர் சிங் மீட்கப்பட்டு.

அங்கேயே முகாமிட்டிருந்த மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சிறுவனின் இரண்டாவது பிறந்தநாள் ஜூன் 10ஆம் திகதிதான் என்று அவன் பெற்றோர் கலங்கி நின்ற நிலையில். மீட்கப்பட்டும் குழந்தையை காப்பாற்ற முடியாதது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.