சிசிடிவி கமெரா பற்றி கவலைப்படாதே : அதிரவைத்த இளம்பெண்களின் வாக்குமூலம்!!

771

வட இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் உட்பட 6 பேர் சென்னைக்கு வந்து விலையுயர்ந்த புடவைகளை திருடிவந்த நிலையில் தற்போது வசமாக சிக்கியுள்ளனர்.

சென்னை தி.நகரில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைக்குள் 4 வடமாநில பெண்கள், 2 ஆண்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு சென்றனர். பட்டுப்புடவை பிரிவில் வெகுநேரமாக புடவைகளை அவர்கள் பார்த்த நிலையில் எதையும் வாங்காமல் வெளியில் சென்றனர்.

இதனால் அவர்கள் மீது கடை ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சோதனை செய்தனர். அப்போது பெண்களின் சுடிதாருக்குள் விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் விசாரித்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஜவுளிக்கடையில் பட்டுப்புடவைகளைத் திருடியவர்கள் டெல்லியைச் சேர்ந்த ராம்குமார் (40), ரிங்குசிங் (35), பீனா (53), ஜோதி (48), சுனிதா (26), தீபாஞ்சலி (21) எனத் தெரியவந்தது.

இவர்கள் டெல்லியிலிருந்து கார் மூலம் சென்னை வந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கடையில் திருடுவதற்கு முன், அதேபகுதியில் உள்ள இன்னொரு பட்டு ஷோரூமில் கைவரிசை காட்டியுள்ளனர். அங்கு 2,22,369 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர்.

அந்த புடவைகளை காரில் வைத்துவிட்டு இந்த கடைக்கு வந்துள்ளனர். இங்கு 1,41,010 ரூபாய் மதிப்புள்ள 3 பட்டுச் புடவைகளை திருடியுள்ளனர். இது தொடர்பாக கடையில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம்.

அப்போது, 4 பெண்களும் கடைக்குள் பேசிக்கொண்டு பட்டுச் சேலைகளை தேர்வு செய்கின்றனர். விலையுயர்ந்த ஒரு பட்டுச்சேலையை ஒரு பெண் எடுத்து இன்னொருவரிடம் கொடுக்கிறார். அவரும் அதை ஆர்வமாக பார்ப்பதுபோல சுடிதாருக்குள் வயிற்றுப்பகுதியில் மறைத்து வைத்துக் கொள்வது தெரிந்தது.

இது குறித்து பொலிசில் சிக்கிய பெண்கள் அளித்த வாக்குமூலத்தில், சில்க் புடவைகளை திருடினால் பணம் கிடைக்கும். டெல்லியிலிருந்து குழுவாக வருவோம். ஒரு தடவை வந்தால் 50 சில்க் புடவைகளை திருடுவோம். இது, எங்களுக்கு ஒரு சம்மர் ட்ரிப் என்று கூறியுள்ளனர்.

பெரிய கடைகளில் சிசிடிவி கமெரா இருக்குமே என்று 4 பெண்களிடம் பொலிசார் கேட்டதற்கு, சிசிடிவி கமெராவா டோன்ட்வொரி ஜி என்று பதட்டம் இன்றி இந்தியில் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ஆறு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்