விமான விபத்தில் உயிரிழந்த கணவன் : கதறும் மனைவி மற்றும் குடும்பம்!!

118

கதறும் மனைவி

விமான விபத்தில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த வினோத் ஹரிஹரனுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆனது தெரியவந்துள்ளது. இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து அருணாச்சலப்பிரதேசத்திற்கு கடந்த 3ஆம் திகதி சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ-என் 32 ரக போர் விமானம் சியாங் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 13 பேரும் உயிரிழந்தனர்.

அதில், கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வினோத் ஹரிஹரன் என்பவரும் ஒருவராவார். வினோத் பிறந்தது கேரளாவாக இருந்தாலும், கல்லூரிப் படிப்பை கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தான் முடித்துள்ளார்.

2011-ல் விமானப்படையில் சேர்ந்த வினோத் கடந்தாண்டு, புயல் வெள்ளம் கேரளாவை புரட்டி போட்ட போது இந்திய விமானப்படையின் சார்பில் நடைபெற்ற மீட்புப் பணியில் சிறப்பாக பணியாற்றினார்.

வினோத்துக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளே ஆகின்றன.
கோவை சூலூர் விமானப்படையில் பணியாற்றிய அவர், கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் அஸ்ஸாமிற்கு மாற்றப்பட்டுள்ளார். அஸாமில் இருந்த வினோத்தின் மனைவி, விடுமுறைக்காக கோவை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், இந்தக் கோர விபத்து குறித்து கிடைத்த தகவலால் வினோத்தின் மனைவி மற்றும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.