சென்னைக்கு வேலை விடயமாக வந்த கணவன் : ஊரில் இருந்த மனைவி செய்த செயல்!!

198

மனைவி செய்த செயல்

தமிழகத்தில் இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை அடுத்த வேகாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கு சங்கர் என்பவருடன் திருமணமாகி அஸ்வினி மற்றும் தனுஷ் என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. கேட்டரிங் பணிக்காக சங்கர் 3 நாட்களுக்கு முன் சென்னை சென்றிருந்தார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த நித்யா, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் 3 பேர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.