வெளிநாட்டில் கணவன்… தனியாக குழந்தைகளுடன் தங்கியிருந்த மனைவிக்கு நடந்த பயங்கரம்!!

493

மனைவிக்கு நடந்த பயங்கரம்

பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் காவல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் சௌமியா (31).

இவர் நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று அவர் மீது கார் ஒன்று மோதியது, அதன் பின் அதன் உள்ளே இருந்த நபர் ஒருவர், செளமியா தப்ப முயன்றதை அறிந்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தார்.

இதனால் இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், சம்பவ தினத்தின் போது செளமியாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர் ஓடி வந்துள்ளனர்.

அதற்கு முன்னரே அந்த நபர் செளமியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டி, அதன் பின் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு, அங்கிருந்து தப்பிக்கு முயன்ர போது அவர்கள் பிடித்துள்ளனர்.

அப்போது இளைஞரின் உடலிலும் தீக்காயம் இருந்தது தெரியவந்தது. சௌமியாவின் கணவர் புஷ்கரன் வெளிநாட்டில் இருக்கிறார். அவருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி செளமியாவை எரித்து கொலை செய்தவர் ஆலுவா போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் அஜாஸ் (33) என்பது தெரியவந்துள்ளது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரியை மற்றொரு ஆண் பொலிஸ் அதிகாரி தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.