வலி தாங்க முடியாமல் கதறினேன்… தன்னை திருமணம் செய்ய மறுத்த மகளுக்கு தந்தை செய்த கொடூரம்!!

1278

மகளுக்கு தந்தை செய்த கொடூரம்

உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த மகளை, அவருடைய தந்தை கத்தியால் குத்தி கால்வாயில் தூக்கி வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தன்னுடைய மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இது பிடிக்காத அவருடைய தந்தை படிப்பை நிறுத்திவிட்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த சிறுமி, படிப்பை தொடர வேண்டும் என தன்னுடைய ஆசையினை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய தந்தை மகனுடன் சேர்ந்து மகளை கத்தியால் குத்தி கால்வாயில் தூக்கி வீசிச்சென்றுள்ளார்.

ஆனால் இதிலிருந்து தப்பி பிழைத்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாணவி கூறுகையில், நான் திருமணத்திற்கு மறுத்ததால், பின் பக்கத்திலிருந்து துணியால் என்னுடைய சகோதரன் கழுத்தை இறுக்கினான்.

அப்போது என்னுடைய தந்தையை கத்தியால் சரமாரியாக குத்தினார். வலி தாங்க முடியாமல் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். தாகம் எடுத்ததால், தண்ணீர் வேண்டும் என கேட்டேன். உடனே அவர் என்னை கால்வாயில் தூக்கி எறிந்துவிட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து நான் இறந்துவிட்டேனா என்பதை உறுதி செய்ய மீண்டும் அந்த இடத்திற்கு வந்தார்.

ஆனால் அதற்குள் அங்கிருந்து நான் தப்பிவிட்டேன் என கூறியுள்ளார். சம்பவம் குறித்து சிறுமியின் மாமா கூறுகையில், சிறுமியின் சகோதரியை தான் நான் திருமணம் செய்துள்ளேன். அவர் பல மாதங்களாக எங்களுடைய வீட்டில் தங்கி தான் படித்து வந்தார். படிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.

அவரை திருமணம் செய்துகொள்ள முயன்று அவருடைய தந்தை தோல்வியடைந்ததால், இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கிருந்து அழைத்து சென்றுவிட்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.