வேண்டுமென்றே கடலில் மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் விமானம் : காரணம் இதுதான்!!

846

மூழ்கடிக்கப்பட்ட பயணிகள் விமானம்

துருக்கியில் பயன்படுத்தப்படாத ஏர்பஸ் ஏ330 ரக பயணிகள் விமானத்தை வேண்டுமென்றே கடலில் மூழ்கடித்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள். துருக்கியின் வடமேற்குப் பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக எடிர்னே மாகாண துணை ஆளுநர் அலி உய்சல் தெரிவித்துள்ளார்.

எடிர்னே மாகாணத்தில் உள்ள பிரைஸ் துறைமுகத்திலிருந்து சில மைல் தொலைவில் விமானம் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்கூபா டைவிங் சுற்றுலாவை ஈர்க்க ஏகன் கடலில் 30 மீட்டர் ஆழத்தில் 65 மீட்டர் நீள விமானம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து துணை ஆளுநர் அலி உய்சல் கூறியதாவது, ஏகன் கடற்பகுதி சுற்றுலா தளங்களில் மிக முக்கியமான தளமாக திகழ்கிறது. ஸ்கூபா டைவிங் சுற்றுலா வேறுபட்ட சந்தைப் பிரிவைக் கொண்டுள்ளது.

ஒரு சாதாரண சுற்றுலா மூலம் 500-600 டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்ட முடியும், அதே நேரத்தில் ஸ்கூபா டைவிங்கிற்காக வரும் சுற்றுலாப் பயணிகளால் 2,000-3,000 டாலர் சம்பாதிக்கலாம். இந்த காரணத்திற்காக தான் விமான் கடலில் மூழ்கடிக்கப்பட்டது என அலி உய்சல் குறிப்பிட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு தனது சேவையை தொடங்கிய ஏர்பஸ் ஏ330ரக பயணிகள் விமானம் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.