திருமணம் முடிந்த 4 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!!

168

காதல் ஜோடி

ஐதராபாத் மாநிலகாதல் ஜோடித்தில் திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இளம் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் மாநிலம் கோதாவரி அருகே செல்போன் நிறுவனத்தில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்த சந்தோஷ் (28), செல்போன் கடையில் வேலை செய்து வந்த அர்ச்சனா (28) என்பவருடன் அறிமுகமாகியுள்ளார்.

சில நாட்களிலே இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து இருவரும் ஐதராபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்துள்ளனர். அங்கு சென்ற சில நாட்களிலே அர்ச்சனாவிற்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துள்ளது.

இதற்கிடையில் தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட இருவரும் தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று அர்ச்சனா நீண்ட நேரமாகியும் வேலைக்கு வராததால், கடையின் உரிமையாளர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அங்கு இருவரும் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பதை பார்த்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.