அம்மா இறந்தும் அவரது குரலை தினமும் கேட்கும் குட்டிப் பெண் : ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!!

173

நெகிழ்ச்சி சம்பவம்

ஒரு குட்டிநெகிழ்ச்சி சம்பவம்!ப்பெண் 15 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரது தாய் இறந்து போக, அவர் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக அவரது உறவினர்கள் தினமும் அவளது தாயின் குரலை கேட்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் லிவர்பூலைச் சேர்ந்த Penelope Turner, 15 மாத குழந்தையாக இருக்கும்போது, ஒரு நாள் அவரது தாய் Kirsten Hawksey (23) திடீரென இறந்து போனார்.

குட்டிக்குழந்தையை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் Penelope வளர்ந்தால், அவரது தாய் அவரை எவ்வளவு நேசித்தார் என்பதை மறந்து விடக் கூடாது என்பதற்காகவும், அவள் தனது தாயை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காகவும் அவளது உறவினர் ஒரு திட்டம் தீட்டினார்.

அதன்படி Penelopeஇன் தாய் Kirsten உயிரோடிருக்கும்போது, அவர் சிரித்தது, குட்டிப்பெண்ணுக்கு முத்தமிட்டது, அவளிடம், ஐ லவ் யூ என்று சொன்னது என அத்தனை சத்தங்களையும் பதிவு செய்து ஒரு பொம்மைக்குள் வைத்து, அந்த பொம்மையை குழந்தைக்கு கொடுத்துவிட்டார் அந்த உறவினர்.

அத்துடன் குட்டிபெண்ணின் காலுறையில், அவளது தாய் Kirsten வழக்கமாக பயன்படுத்தும் பெர்பியூமை தெளித்து அதையும் அந்த பொம்மைக்குள் வைத்துள்ளார்.

இதனால் அம்மாவின் வாசனையை Penelope எப்போதும் முகர்ந்து பார்க்க முடியும். அம்மா என தான் அழைக்கும் அந்த பொம்மையின் வயிற்றை அழுத்தினால், அது Penelopeஇன் அம்மாவின் குரலில் பேச, அவள் மனம் நெகிழ்ந்து போகிறாள். அம்மா இல்லையென்றாலும், Penelope அம்மாவின் குரலைக் கேட்டுக் கொண்டே வளரலாம்.