காதலியை கட்டியணைத்தபடியே ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த காதலன்!!

367

இளம்காதல் ஜோடி

தெலுங்கானா மாநிலத்தில் இளம்காதல் ஜோடி ரயில்தண்டவாளத்தில் தலையை கொடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா காத்வால் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில், இளம் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செய்தியாளர்களிடம் பேசுகையில், உண்டவள்ளி மண்டல் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் மற்றும் கஸ்தூரி ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன்காரணமாகவே இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.