துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த நபர் : அதிர்ந்துபோன போலீசார்!!

333

அதிர்ந்துபோன போலீசார்

ஆந்திராவில் மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரின் தலையை துண்டித்து கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்த நபரை பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலக்கடாவை சேர்ந்தவர் உசேன். இவரது மனைவி அம்மாஜியின் நடத்தை குறித்து உசேனுக்கு சந்தேகம் எழுந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆத்திரத்தில் மனைவியின் கழுத்தை உசேன் அறுத்துள்ளார். துண்டிக்கப்பட்ட தலையை கையில் எடுத்துக்கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று அங்கு நடந்த விவரங்களை கூறி சரணடைந்துள்ளார் உசேன்.

இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.