ஒரே பிரசவத்தில் 17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்ணின் உண்மை முகம் வெளியானது!!

887

17 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தை பெற்றதாக, சமீபத்தில் புகைப்படத்துடனான பேஸ்புக் பதிவு இணையத்தில் வைரலானதில் உண்மை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த மே 30ம் திகதி Richard Camarinta Dy என்ற நபர் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட பதிவு உலகம் முழுவதும் பயங்கர வைரலானது. அந்த பதிவில், அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் பிரிட்ஜ் என்ற பெண் ஒரே பிரசவத்தில் 17 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளதாக பதிவிட்டார்.

அந்த பதிவுடன் கேத்தரின் பிரிட்ஜ் பெரிய வயிற்றுடன் நிற்கும் புகைப்படம், 17 ஆண் குழந்தைகள் ஒரே அறையில் இருக்கும் புகைப்படம் மற்றும் குழந்தைகள் தந்தை Robert M Biter உடன் இருக்கும் ஒரே புகைப்படம் என மூன்று புகைப்படங்களை இணைத்து வெளியிட்டார்.

இப்பதிவை பலர் பகிர்ந்ததால் இது உலகளவில் வைரலானது. இந்நிலையில், குறித்த செய்தி பொய் என கண்டறியப்பட்டுள்ளது. அப்பெண் பெரிய வயிற்றுடன் இருக்கும் புகைப்படம் ஃபோட்டாஷாப்பில் வடிவமைக்கப்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், குறித்த செய்தி கற்பனை கட்டுரை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரே ஒரு பெண்மணி மட்டுமே ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பெற்றெடுத்ததே சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.