பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு குவியும் கோடிகள் : இதுவரை வெளிவராத தகவல் இதோ!!

883

பிக் பாஸ்

டிவி பார்க்கும் பழக்கம் இல்லாதவர்களையும் டிவி பார்க்க வைத்த பெருமை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உண்டு. அடுத்தவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாமல் பல விஷயங்களை வெளியே கொண்டு வருவது தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு.

அதிலும், திரையில் வரும் நட்சத்திரங்களின் வேறு ஒரு முகத்தை பார்க்க வேண்டும், என்றால் யாருக்கு தான் ஆர்வம் இருக்காது. அப்படி ஒரு நிகழ்ச்சியாக இருப்பதால் தான் பிக் பாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வெளிவராத தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்பவர்கள் மக்களிடம் பிரபலமாவது ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு சம்பளமும் வழங்கப்படுகிறது. ஒரு எப்பிசோட்டுக்கு இவ்வளவு சம்பளம் என்று ஒப்பந்தம் போட்டு தான் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், போட்டியாளர்களின் சம்பளம் விஷயத்தில் இருந்த சஸ்பென்ஸ் தற்போது உடைந்திருக்கிறது.

பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களின் சம்பளம் இவ்வளவு என்று ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டாலும், போட்டியில் யார் அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி நிகழ்ச்சியை பரபரப்பாக்கிறார்களோ அவர்களின் சம்பளம் உயரும் என்பது அக்ரிமெண்டில் உள்ள சாரம்சமாம்.

அந்த வகையில், பிக் பாஸ் முதல் சீசனில் ஓவியா பெரும் தொகை சம்பளமாக பெற்ற நிலையில், அவருக்கு அடுத்தபடியாக காயத்ரி ரகுராம், மக்களுக்கு எரிச்சல் வரும் அளவுக்கு நடந்துக்கொண்டு தனது சம்பளத்தை உயர்த்திக் கொண்டாராம்.

தற்போது ஒளிபரப்பாகும் மூன்றாவது எப்பிசோட்டில் அப்படி யார் செய்கிறார்களோ அவர்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்குமாம். மக்கள் தங்களை என்ன தான் திட்டினாளும், தங்களது இமேஜ் டேமஜாகிறது என்பதையெல்லாம் கவலைப்படாமல் போட்டியில் அவ்வபோது சர்ச்சைகளை உருவாக்கினால் அவர்களது சம்பளம் உயரும்.

அதிலும், முதல் இரண்டு சீசனுக்கு இல்லாத அளவுக்கு மூன்றாவது சீசனுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைத்திருக்கிறதாம். கடந்த இரண்டு சீசன்களிலும் 30 க்கும் குறைவான நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்த நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும் 3 வது சீசனுக்கு மொத்தம் 69 நிறுவனங்கள் ஸ்பான்ஷர் செய்திருக்கிறதாம்.

ஸ்பான்ஷர் செய்த நிறுவனங்கள் பல கோடிகளை கொட்டி வர, அவை அனைத்தும் போட்டியாளர்களின் செய்கை மற்றும் அவர்களது பர்பாமன்ஸுக்கு ஏற்றவாறு சம்பளமாக வழங்கப்படுமாம். மொத்தத்தில், பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு ஜாக்பாடி அடித்துவிட்டது என்றே சொல்லலாம்.