திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன புதுமணப்பெண் திடீர் மாயம்!!

275

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொண்ட புதுமணப்பெண் திடீரென மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் சூசை மகன் ராபின்சன். இவருக்கும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் மகள் பிலோமினாள் (வயது20) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு ராபின்சன் வேலைக்காக சென்னை சென்றுவிட்டார். மனைவி மட்டும் சொந்த ஊரில் ராபின்சன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

சென்னை சென்ற ராபின்சனுக்கு பலமுறை போன் செய்து பிலோமினாள் மகிழ்ச்சியாக பேசியுள்ளார். ஆனால் வேலையை காரணம் காட்டி ராபின்சன் போனை துண்டித்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த பிலோமினாள் கடந்த 1-ம் தேதி வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். இது குறித்து பிலோமினாள் பெற்றோருக்கு ராபின்சன் குடும்பத்தினர் தெரியப்படுத்தினர்.

இதையடுத்து திருச்சியிலிருந்து பிலோமினாளின் தாய் செந்தாமரை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மாயமான பிலோமினாளை தேடி வருகின்றனர்.