கடிதம் எழுதிவிட்டு மாயமான திருமணமான பெண் : வேறு ஊரில் உயிரோடு இருப்பது அம்பலம்!!

242

மாயமான திருமணமான பெண்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், த ற்கொ லை செய்து கொண்டார் என கூறப்பட்ட பெண் தற்போது வேறு ஊரில் உயிரோடு இருக்கிறார் என தெரியவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த கோமல் என்ற பெண் கடந்த 5ஆம் திகதி வீட்டிலிருந்து மாயமானார். இது குறித்த புகாரின் பேரின் பொலிசார் கோமலை தேடி வந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு இடத்தில் அவர் காரை கண்டுபிடித்தனர்.

காரின் உள்ளே கோமல் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது, அதில் கணவரும், அவர் குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அதன் காரணமாக த ற்கொ லை செய்ய போவதாகவும் எழுதியிருந்தது.

அந்த இடத்தின் அருகிலேயே பெரிய நதி இருந்ததால் அதில் குதித்து கோமல் த ற்கொ லை செய்திருக்கலாம் என கருதிய பொலிசார் இரண்டு நாட்களாக கோமலை அங்கு தேடி வந்தனர். ஆனால் கோமல் கிடைக்காததால் தேடுவது நிறுத்தப்பட்டது. ஆனால் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக கோமல் மும்பையில் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

பின்னர் அங்கு பொலிசார் சென்ற போது, அவர் பெங்களூரில் இருப்பதாக கூறப்பட்டது. இறுதியில் பெங்களூரில் அவர் இருப்பது உறுதி செய்யப்பட்டு பொலிசார் அங்கு சென்றனர். அங்கு கோமல் சுற்றி திரிந்ததை பார்த்த பொலிசார் அங்கிருந்து அவரை சொந்த ஊருக்கு அழைத்து வருகின்றனர்.

இதனிடையில் உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த கோமல், கணவரும், அவர் குடும்பத்தாரும் என்னை துன் புறுத்தியால் வெறுப்படைத்து வீட்டை விட்டு வெளியேறினேன்.

நான் பெங்களூக்கு வரவேண்டும் என திட்டம் போடவில்லை, நான் எங்கு செல்கிறேன் என தெரியாமலேயே இங்கு வந்துவிட்டேன் என கூறியுள்ளார். கோமலின் பேச்சு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.