தூங்கி கொண்டிருந்த தம்பதி : நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல் : மனைவி காலில் விழுந்து கெஞ்சியும் நடந்த சம்பவம்!!

482

நள்ளிரவில் வீடு புகுந்த கும்பல்

தமிழகத்தில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கும்பல் இளைஞரை வெ ட்டி கொ லை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையை சேர்ந்தவர் நிரூபன் சக்கரவர்த்தி. இவர் தந்தையை முத்து இருள் என்பவர் கடந்தாண்டு அடித்துள்ளார். இதனை நிரூபன் தட்டிக்கேட்டதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.

இந்நிலையில் திருட்டு வழக்கில் முத்து இருள் கடந்த ஆண்டு சிறை சென்றார். சிறையில் இருந்து சில நாட்களுக்கு முன் வெளிவந்த அவர், நிரூபனை ப ழிவாங்க எண்ணியதாக தெரிகிறது.

இது குறித்து அவர் திட்டம் போட்டார். பின்னர் ஹெல்மெட் அணிந்த 6 பேர் கொண்ட கும்பலுடன் சென்ற முத்து நள்ளிரவில் நிரூபனின் வீட்டுக்குள் புகுந்தார். அங்கு நிரூபன் தனது மனைவி குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிரூபனை வெ ட்டி கொ லை செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது நிரூபன் மனைவி தனது குழந்தைகளுடன் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த கும்பல் கொ டூர கொ லையை அரங்கேற்றியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.