வீட்டில் தனியாக இருந்த மனைவி : வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவர் கண்ட காட்சி!!

293

கணவர் கண்ட காட்சி

தமிழகத்தில் மகனை கொ லை செய்துவிட்டு தாயும் தூக் கிட்டு த ற்கொ லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகையை சேர்ந்தவர் சுமிதா. இவரின் முதல் கணவர் இற ந்துவிட்ட நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார்.

ஜெயக்குமாரின் முதல் மனைவி ஏற்கனவே இற ந்து விட்டார். ஜெயக்குமார்- சுமிதா தம்பதிக்கு 2 வயதில் ரித்திஷ் என்கிற மகன் உள்ளான். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் ஜெயக்குமார் வேலைக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் வீட்டில் மகனுடன் தனியாக இருந்த சுமிதா தனது தாய் அமுதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நீங்கள் திருமணத்திற்காக எனக்கு போட்ட நகை மற்றும் பொருட்களை எடுத்து செல்லுங்கள் என கூறிவிட்டு உடனடியாக தொடர்பை துண்டித்து விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அமுதா தனது மகளை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதற்கிடையே வேலைக்கு சென்றிருந்த ஜெயக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் உள்ள அறையில் ஒரே சேலையில் மனைவி சுமிதாவும், மகனும் ரித்திசும் தூக் கில் பி ணமாக தொங் கியதை கண்டு கதறி அழுதார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சுமிதா, ரித்திஷின் உட ல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.