விமானத்தில் இளம்பெண் செய்த காரியம் : ஆத் திரமடைந்த பயணிகள் : 85,000 பவுண்ட் அபராதம்!!

430

பிரித்தானியாவில் இருந்து துருக்கி பயணித்த விமானத்தில் இளம்பெண் ஒருவர் ரக ளையில் ஈடுபட்ட சம்பவம் பயணிகளிடையே கடும் ஆத் திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனின் ஸ்டான்ஸ்ட்டில் இருந்து துருக்கிக்கு ஜெட் 2 நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்த 25 வயதான சோலி ஹைன்ஸ் என்ற பெண், விமானத்தை கடத்தி, அனைவரையும் கொ ல்லப்போவதாக மி ரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து, விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது கதவை திறக்க முயன்றுள்ளார். பின்னர், விமானி அறைக்குள் அதி ரடியாக நுழைய முயன்றுள்ளார்.

மேலும், விமான உதவியாளரை தாக்க, ஆத் திரமடைந்த பயணிகள் ஹைன்ஸை கட்டுப்படுத்தியுள்ளனர். விமானத்தில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக விமானம் மீண்டும் ஸ்டான்ஸ்ட்டில் தரையிறங்கியுள்ளது. இதனையடுத்து, சோலி ஹைன்ஸை பொலிசார் கை து செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து ஜெட் 2 நிறுவனம் கூறியதாவது, மிகவும் சீர்குலைக்கும் நடத்தைக்காக 85,000 பவுண்ட் கட்டணம் செலுத்த வேண்டும் என சோலிக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் விமானத்தில் செய்த செயல்களுக்கு விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்றும், வாழ்நாள் த டை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.