மருத்துவர்களின் தவறான முடிவால் மார்பகங்களையும் தலைமுடியையும் இழந்த இளம்பெண்!!

643

இளம்பெண்

இளம்பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அவரது இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டதோடு, பல மாதங்கள் கடுமையான கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டதால் தலை மொட்டையான கொடுமையும் பிரித்தானியாவில் நடந்தேறியுள்ளது.

Staffordshireஐச் சேர்ந்த Sarah Boyle (28), ஒரு நாள் தனது மகன் தாய்ப்பால் குடிக்க மறுத்து கடுமையாக அழவே, ஏதோ பிரச்சினை என்று பயந்து Royal Stoke University Hospitalக்கு சென்றிருக்கிறார். அவர் பயந்ததுபோலவே, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மார்பக புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

கடுமையான கீமோதெரபி சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டதால் Sarahவின் தலை முடி கொட்டி தலை முழுவதும் மொட்டையாகியிருக்கிறது. அது போதாதென்று, புற்றுநோய் பரவலாம் என்று கூறி, அவரது இரு மார்பகங்களையும் அகற்றிவிட்டனர் மருத்துவர்கள். பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு, Sarahவுக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக கண்டறியப்பட்டது மருத்துவர்களுக்கு தெரியவந்துள்ளது.

உண்மை என்னவென்றால், உடலிலிருந்து எடுக்கப்படும் திசு மாதிரிகளை ஆராய்ந்து புற்றுநோய் உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் histopathologist என்னும் ஆய்வக மருத்துவர் ஒருவர், Sarahவுக்கு புற்றுநோய் இருப்பதாக தவறாக தெரிவித்துள்ளார்.

பல மாத கொடுமையான கீமோதெரபிக்குப் பின், தலை முடியை இழந்து, மார்பகங்களை இழந்து, அதற்கு பதிலாக செயற்கையாக பொருத்தப்பட்ட மார்பக implantகளால் எதிர்காலத்தில் உண்மையாகவே புற்றுநோய் ஏற்படும் அபாயத்திற்குள்ளாகியிருக்கிறார் Sarah.

Sarahவிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், அவர் தொடர்ந்துள்ள வழக்குக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. கீமோதெரபியின் விளைவாக இனி குழந்தை பிறக்காது என்று கூறப்பட்ட நிலையில்,

Sarahவுக்கு இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது, ஆனால் தனது மார்பகங்கள் அகற்றப்பட்டுவிட்டதால், அந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்ட முடியவில்லை என்னும் விடயம் தன்னை வேதனை அடையச் செய்துள்ளதக தெரிவிக்கிறார் அவர்.