நம்பிச் சென்ற காதலியை கொ ன்று பு தைத்த இராணுவ வீரர் : அதிர்ச்சி சம்பவம்!!

1529

அதிர்ச்சி சம்பவம்

கேரளா மாநிலத்தில் காதலியை வீட்டின் பின் பக்கம் கொ ன்று பு தைத்துவிட்டு தப்பி சென்ற காதலனை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜூன் 21 அன்று, கொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ராக்கி (30) என்கிற இளம்பெண், தனது அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த அவருடைய பெற்றோர் ஜூலை 7ம் திகதியன்று பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவருடைய செல்போனை ஆராய்ந்த போது, இராணுவ வீரராக பணிபுரிந்து வரும் அகில் என்கிற இளைஞரை 6 வருடமாக காதலித்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அகில் நண்பன் ஆதர்சிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது பல தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராக்கியுடன் நெருங்கி பழகி வந்த அகில், அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதற்குள் அவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதனை கேள்விப்பட்ட ராக்கி, நேரமாக அந்த மணப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அகிலும் நானும் காதலித்து வருகிறோம் என நடந்தவற்றை கூறியுள்ளார்.

இந்த விடயம் அகில் கவனத்திற்கு வர கடும் கோபமடைந்துள்ளார். நான் ஒரு புதிய வீடு கட்டியிருக்கிறேன். உனக்கு காட்ட ஆசைப்படுகிறேன் என தனியாக வீட்டிற்கு வருமாறு அகில் அழைப்பு விடுத்துள்ளார். அதனை நம்பி சென்ற ராக்கியை, அகில், அவனுடைய சகோதரன் ராகுல் மற்றும் நண்பன் ஆதர்ஷ் ஆகியோர் சேர்ந்து கொ லை செய்த்துள்ளார்.

பின்னர் ராக்கியின் உ டலை வீட்டிற்கு பின் பக்கமாக இருந்த நிலத்தில் புதை த்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சிறிய செடிகளை அதன்மீது நட்டு வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தலைமறைவாக இருக்கும் ராகுல் மற்றும் அகிலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.