புடினின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?

726

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ஆண்டு வருமானம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த தகவல் மாஸ்கோவில் உள்ள கிரெம்லின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு புடின் £217,000 பணத்தை வருமானமாக ஈட்டியுள்ளார். இதில் 828 சதுர அடியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பும் அடக்கமாகும்.

ஆனால் இந்த சொத்து பட்டியலில் 16,145 சதுர அடியில் புடினுக்கு சொந்தமான நிலம் சேர்க்கப்படவில்லை.கடந்த 2013-ல் புடின் £80,955 வருமானமும், 2015-ல் £96,442 வருமானமும் ஈட்டியுள்ளார்.

புடினின் பொதுவான சொத்துக்கள் அடிப்படையில் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வங்கியில் அவருக்கு 230 பங்குகளும் உள்ளது.

முன்னர் புடின் அளித்த ஒரு பேட்டியில், உண்மையாக சொன்னால் என் சம்பளம் குறித்து எனக்கு தெரியாது, என் வங்கி கணக்கில் அது போடப்படும், அதை நான் எண்ணியது கூட இல்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.