வருங்கால மனைவிக்காக டயட்: ஒல்லியான இளவரசர் ஹரி!!

556

இளவரசர் ஹரி, பீட்சா பர்கர் போன்ற உணவுகளை விட்டு விட்டு ஜூஸ் மற்றும் காய்கறி உணவுகளுக்கு மாறியுள்ளதன் பின்னணியில் இருப்பவர் வேறு யாருமில்லை, அவரது மனதை மாற்றிய அதே மேகன் மெர்க்கல்தான்.

திருமணத்திற்காக ராஜ குடும்பத்து பெண்கள் டயட் இருப்பது வழக்கம்தான் என்றாலும், இம்முறை கல்யாண மாப்பிள்ளையாகிய இளவரசர் டயட் இருக்கிறார்.

மேகன் மெர்க்கல் பல ஆண்டுகளாகவே டயட்டில் இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான் என்றாலும், அவர் ஹரியின் சாப்பாட்டிலும் கை வைத்திருக்கிறார் என்பது சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது.சமீபத்திய புகைப்படங்களில் ஹரி மெலிந்து காணப்படுவதின் பின்னணி இதுதான்.

அது மட்டுமின்றி மாதத்திற்கு 575 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கும் ஜிம் ஒன்றிலும் உறுப்பினராகி உடலைக் கட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் இளவரசர் ஹரி.

கார்போஹைட்ரேட் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை விட்டு விட்டு ஜூஸ் மற்றும் காய்கறி உணவுகளை உண்ணத் தொடங்கியுள்ள ஹரியை மாமிசம் சாப்பிடுவதையும், விடுவதற்கு பழக்கப்படுத்தி வருகிறாராம் மெர்க்கல்.

ஒரு ராணுவ வீரராக இருந்தபோது இளவரசர் ஹரி கெண்டக்கி சிக்கனையே எப்போதும் சாப்பிடுவாராம்.ராஜ குடும்ப சமையல்காரரும், வில்லியமும் ஹரியும் பீட்சா, பர்கர் போன்றவற்றை விரும்பி உண்ணுவார்கள் என்று கூறுவதுண்டு.