திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் : வீடியோ அழைப்பில் கூறிய கடைசி வார்த்தை!!

397

வீடியோ அழைப்பில்..

தமிழகத்தின் திருப்பூரில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த இளம்பெண் தூக்குபோட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகள் 28 வயதான அனிதா என்பவரே தூக்கிட்டு த ற்கொ லை செய்துகொண்டவர். அனிதாவிற்கும் கோவை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கணேசன் (32) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து கோவையில் சில மாதங்கள் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கணவர் குடும்பத்தினருக்கும் அனிதாவுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அனிதா கணவருடன் திருப்பூரில் உள்ள தனது தாய் வீடு அருகே குடியேறினார். அங்கு சில நாட்களில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த கணேசன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கணவர் திரும்பி வருவார் என்று காத்திருந்து ஏமாந்த அனிதா தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மாலை தனது தம்பி அசோக்கிற்கு வீடியோ அழைப்பு செய்து பேசியுள்ளார். அப்போது அக்காள் அழுவதும், மின்விசிறியில் துப்பாட்டா தொங்குவதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து கேட்க முயன்றபோது அனிதா போனை துண்டித்து விட்டார். மகள் ஓய்வு எடுத்துகொண்டுள்ளதாக வீட்டில் இருந்த தாய் சரஸ்வதி நினைத்தார். ஏதோ விபரீதம் நடக்கப் போவதாக அச்சமடைந்த தம்பி இது குறித்து தனது தந்தைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த தந்தை வீட்டுக்கு ஓடினார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா மின்விசிறியில் பிணமாக தொங்கியதை அவர் பார்த்துள்ளார். மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இது குறித்து திருப்பூர் ஊரக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. செண்பகவள்ளி இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.