பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய இளைஞர் : பதறிப்போன நண்பர்கள்!!

120

பேஸ்புக் நேரலையில்..

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வந்த இளைஞர் திடீரென பேஸ்புக் நேரலையில் தூக்கு போட்டு த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த 27 வயதான சுபங்கர் சக்ரவர்த்தி கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரியை விட்டு பிரிந்து டெல்லியில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் பேஸ்புக்கில் நேரலை செய்த சுபங்கர், முதலில் தான் பணிபுரியும் சீருடையை அணிந்துள்ளார். அதன்பிறகு குளிரூட்டியின் மேல் ஏறி நின்று தன்னுடைய அடையாள அட்டையை எடுத்து, ‘ஐ லவ் யூ’ எனக்கூறியபடியே முத்தமிட்டுள்ளார்.

பின்னர் சரியாக உச்சரிக்காத ஒருவரின் பெயரை கூறிக்கொண்டே கயிற்றில் தொங்கியுள்ளார். அந்த சமயத்தில் இதனை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் அனைவரும் வேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.

இதற்கிடையில் சக்ரவர்த்தியின் நண்பர் சூர்யகாந்த் தாஸ், உடனடியாக பொலிஸாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உள்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்த கதவை உடைத்துக்கொண்டு சென்றனர்.

அங்கு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த சக்ரவர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து த ற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.