பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் விமானி : சாதனை படைத்த அழகான இளம் பெண்!!

132

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் விமானி

பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையை ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனுப்பிரியா லக்ரா என்பவர் பெற்றுள்ளார்.

மால்கங்கிரி மாவட்டத்த சேர்ந்த அனுப்ரியா விமானியாக வேண்டும் என்ற கனவால், பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்தினார். பின்னர் விமானிகளுக்கான தகுதித் தேர்வில் வெற்றி பெற்று கடந்த 2012ம் ஆண்டு புவனேஷ்வரில் உள்ள விமானிகளுக்கான பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார்.

7 ஆண்டுகால பயிற்சியை வெற்றிகரமாக முடித்துள்ள அனுப்ரியா, தற்போது தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்றில், இணை விமானியாக பணியில் சேர்ந்துள்ளார். வெகுவிரையில் வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்கவிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநில காவல்துறையில் ஹவில்தாராக பணிபுரியும் மரினியாஸ் லக்ராவின் மகளான அனுப்ரியா, விமானியாக வேண்டும் என்ற தனது கனவை எட்டிப்பிடித்ததோடு, பழங்குடியினத்தை சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதனிடையே சாதனை பெண்ணான அனுப்ரியாவுக்கு வாழ்த்து தெரிவித்து, ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதோடு பல்வேறு தரப்பினரும் அனுப்பிரியாவை பாராட்டி வருகின்றனர்.