4 நிமிடங்களில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி!!

149

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் கருவுறுதல் முரண்பாடுகளை மீறிய ஒரு தம்பதியினருக்கு 4 நிமிடங்களுக்குள் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.

பிரித்தானியாவை சேர்ந்த சியாரா ஃப்ளின் என்கிற பெண்ணுக்கு இளம் வயதிலேயே பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் இருப்பது கண்டறியப்பட்டதால், ஹார்மோன்களை தூண்டுவதற்காக ஊசிகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

இருந்தாலும் கூட அவருக்கு கருவுறுதல் சாத்தியமாகததால், ஐ.வி.எஃப்-ஐப் முறையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதனையடுத்து கர்ப்பமடைந்த சியரா 8 மாத கர்ப்பிணியாக இருந்த போது ஆகஸ்டு 23ம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சியாரா – ஷேன் மாகி தம்பதியினருக்கு காலை 9.19 மணி முதல் காலை 9.23 மணி வரை டப்ளினில் உள்ள கூம்பே மருத்துவமனையில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை அறுவை சிகிச்சை முறையில் பிறந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சியாரா, தனது வாழ்க்கை திடீரென்று மிகவும் பரபரப்பாகிவிட்டது என கூறியுள்ளார்.