பேஸ்புக் நட்பு : வீட்டுக்கு தனியாக அழைத்து அ த்துமீறிய இளைஞர் : புகைப்படம் வெளியிட்டு மி ரட்டல்!!

234

அ த்துமீறிய இளைஞர்

தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பேஸ்புக்கில் அறிமுகமான இளம் பெண்ணிடம் த வறாக நடக்க முயன்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் மணலூர் பகுதியை சேர்ந்த 25 வயது பாலமுருகன் என்பவருக்கு பேஸ்புக் மூலம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பாக பழகிய இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில் பாலமுருகனின் அழைப்பை ஏற்று அவரது ஊருக்கு குறித்த இளம் பெண் சென்றுள்ளார்.

அங்கு, தனிமையில் அந்த இளம் பெண்ணிடம் பாலமுருகன் அ த்துமீறியதாக கூறப்படுகிறது. இதில் அ திர்ச்சியடைந்த அந்த இளம் பெண், அங்கிருந்து தப்பி ஊருக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி நடந்த சம்பவத்தை தமது பெற்றோரிடமும் ஒப்புவித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் பாலமுருகன் தொடர்பில் விசாரித்ததில், அவர்களுக்கும் தவறான தகவலே கிடைத்துள்ளது.

இந்த நிலையில் குறித்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட பாலமுருகன், தம்மை திருமணம் செய்து கொள்ள மறுத்தால், ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிடுவேன் என மி ரட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தால் அ திர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாக திட்டக்குடி பொலிசாரை அணுகி நடந்தவற்றை விளக்கி புகாராக அளித்துள்ளனர்.

தொடர்புடைய இளைஞரை மொபைலில் அழைத்த பொலிசார், திட்டக்குடிக்கு வரவழைத்து விசாரித்துள்ளனர். இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.