இரவில் இளம்பெண் வீட்டுக்கு வந்து என்னுடன் வா என அழைத்த இளைஞர் : பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

302

அதிர்ச்சி சம்பவம்

தமிழகத்தில் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி வீட்டின் முன்பு வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீ க்குளித்து உ யிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வடபழனியைச் சேர்ந்தவர், மொய்தீன் (27). எர்ணாவூரை சேர்ந்தவர் மீனா (23). இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது. மீனா தன்னுடைய காதல் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதற்கு அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மீனாவை வேலைக்கு அனுப்புவதையும் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து மொய்தீன், மீனாவை போனில் தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மொய்தீனிடம் செல்போனில் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், ம னமுடைந்த மொய்தீன், நேற்று முன்தினம் இரவு மீனாவின் வீட்டுக்கு வந்து தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மீனாவின் பெற்றோர், பி ரச்சினை செய்யாமல் இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆ த்திரமடைந்த மொய்தீன், தான் கேனில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய்யை, திடீரென்று உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனால் உ டல் முழுவதும் தீப்பற்றிக்கொண்டதில் மொய்தீன் அ லறி து டித்தார். உடனே இதைப்பார்த்த மீனா ஓடி வந்து தீயை அணைத்து, அவரை காப்பாற்ற முயன்றார். இதையடுத்து அவர் மீதும் தீ பரவியது.

பின்னர் அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் நேற்று மொய்தீன் சிகிச்சை பலனின்றி இ றந்தார். மீனாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.