சொந்த மகளை தலை து ண்டித்து கொ லை செய்த குடும்பம் : அதிர வைக்கும் சம்பவம்!!

121

அதிர வைக்கும் சம்பவம்

அரியானா மாநிலத்தில் தன்னுடைய சொந்த மகளை பெற்றோரே த லை து ண்டித்து கொ லை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ள கோஹானா கிராமத்தை சேர்ந்த ரித்து என்கிற 28 வயது இளம்பெண் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வீட்டின் எதிர்ப்பையும் மீறி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இருந்தாலும் கூட தன்னுடைய சகோதரியுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சனிக்கிழமையன்று ரித்து தனக்கு உடல்நிலை சரியில்லை என சகோதரியிடம் கூறியுள்ளார்.

உள்ளூர் மருத்துவமனையில் பரிசோதித்துக்கொள்ளலாம் என அவர் கூறியதால், அதனை நம்பி ரித்து கணவருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை முடிந்த பின்னர் வீட்டில் இருக்கும் பெற்றோரை சந்திக்க வருமாறு ரித்துவின் சகோதரி கோரிக்கை விடுத்துள்ளார். அதனை ஏற்று ரித்துவும் தன்னுடைய தாய் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் அர்ஜுன் அவர்களுடன் வீட்டிற்கு செல்லவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த குடும்பத்தினர், ரித்துவை த லை து ண்டித்து கொ லை செய்துள்ளனர். மேலும் அர்ஜுனையும் கொ லை செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அர்ஜுன் அங்கிருந்து தப்பி ஓடி பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், ரித்துவின் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரர் உட்பட ஆறு நபர்கள் மீது பிரிவு 302 (கொ லை) மற்றும் ஐபிசியின் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.