ஒரு முத்தத்தால் வேலையை இழந்த ஆசிரியர் : சமையல் வேலை பார்க்கும் பரிதாபம்!!

330

வேலையை இழந்த ஆசிரியர்

தனது உதவியாளரான ஒரு இளம்பெண்ணுக்கு பணியின்போது முத்தம் கொடுத்த ஒரு ஆசிரியர் தனது வேலையையே இழந்துள்ளார்.

Powysஐச் சேர்ந்த John Lawrence (35) பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். ஒருநாள் ஆறு வயதுடைய மாணவிகளை வெளியே அழைத்துச் சென்றபோது, அவருடன் உதவியாளரான 18 வயது இளம்பெண் ஒருவரும் சென்றுள்ளார்.

மாணவிகளை கவனிக்காமல் விட்டுவிட்டு தனது உதவியாளருக்கு முத்தமிட்டுள்ளார் Lawrence. மாணவிகளை கவனிக்காமல் விட்டதாகவும், பணியின்போது முறைதவறி நடந்ததாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த இளம்பெண்ணோ, Lawrenceதான் தன்னை முத்தமிட்டதாகவும், தான் அவரை பிடித்து தள்ளிவிட்டதாகவும் கூறிவிட்டார்.

பின்னர் விசாரணையில் இருவருக்கும் கொஞ்ச காலமாகவே பழக்கம் இருந்து வந்ததும், அந்த பெண் 18 வயதை அடைந்ததும் இருவரும் தங்களுக்குள் நி ர்வாண படங்களை பகிர்ந்து கொண்டதும் தெரியவந்தது.

Lawrenceஐ பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழு ஓராண்டுக்கு பணியிடைநீக்கம் செய்தது. ஆனால் அவமானம் காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார் Lawrence.

முட்டாள்தனமாக ஒரு முத்தத்தால் வேலையையே இழந்துவிட்டேன் என்று கூறும் Lawrence தற்போது ஹொட்டல் ஒன்றில் செஃப் ஆக பணியாற்றி வருகிறார். Lawrence திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.