பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்பும் 70 வயது தமிழர்!!

163

70 வயது தமிழர்

தமிழகத்தைச் சேர்ந்த 70 வயதான நபர் ஒருவர், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைச்சாமி என்ற 70 வயது முதியவரே இவ்வாறு கோரிக்கை விடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.இது உண்மையா?அல்லது நகைச்சுவையா? என்று பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படாவிட்டால், சிந்துவைக் க டத்திச் சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்த வாராந்திர கூட்டங்களின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

மலைச்சாமி, ஆட்சியரிடம் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து மற்றும் தன்னுடைய புகைப்படத்துடன், அவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு இருக்கும் ஆர்வத்தை வலியுறுத்தும் கடிதத்தை அளித்துள்ளார்.

அவர் அந்த மனுவில் தான்(மலைச்சாமி) ஏப்ரல் 4, 2004 அன்று பிறந்த 16 வயது சிறுவன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிந்துவின் விளையாட்டு வளர்ச்சியால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும், இப்போது அவர் தனது வாழ்க்கைத் துணையாக மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.