கடலுக்குள் சென்ற நபருக்கு தேடி வந்த 23 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் : ஆனால் அவர் என்ன செய்தார் தெரியுமா?

588

அயர்லாந்தில் சுமார் 23 கோடி ரூபாய் மதிப்பிலான டுனா மீன் பிடிபட்ட போது, அதை மீண்டும் கடலுக்குள் விட்ட நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, அட்லாண்டிக் கடலில் உள்ள கடல்வாழ் உயிரினங்களின், குறிப்பான மீன் வகைகளை உலகிற்கு காட்டவும், அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு கேட்ச் அண்ட் ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் இந்த நிகழ்ச்சியை, வரும் அக்டோபர் 15ஆம் திகதி வரை நடத்தவுள்ளனர். இதற்காக, அயர்லாந்து கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களது வலையில் பெரிய டுனா மீன் ஒன்று சிக்கியது. இதன் எடை 270 கிலோ ஆகும்.

இந்தாண்டில் பிடிபட்ட அதிக எடை கொண்ட மீன் இதுவாகும், அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 23 கோடி ரூபாய் ஆகும். ஆனால் டேவ் எட்வர்ட்ஸ் தலைமையிலான குழு, இந்த டுனா மீனை மீண்டும் கடலில் விட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், இணையவாசிகள் பலரும் இப்படி தேடி வந்த அதிர்ஷ்டத்தை விட்டுவிட்டார் எனவும், ஒரு சிலர் அவரை பாராட்டியும் வருகின்றனர்.