மா யமான கணவனை 36 வருடங்களுக்கு பின் முதியோர் இல்லத்தில் சந்தித்த மனைவி : நெகிழ்ச்சி சம்பவம்!!

459

வேலை தேடி சென்ற போது மா யமான கணவனை, 36 வருடங்களுக்கு பின்னர் அவருடைய மனைவி சந்தித்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் 90 வயதான சைடு என்பவர், கேரளா மாநிலம் திருச்சூர் கொடுங்கல்லூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கவனிப்பாளரான அப்துல் கரீம் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அறையில் இருந்து வெளியில் வந்த ஒரு பலவீனமான வயதான பெண் பெருமூச்சுடன் சைடுவைக் கண்டதும் உறைந்துபோய் நின்றிருக்கிறார்.

அதேசமயம் சைடுவும் அதிர்ச்சியடைந்துள்ளார். இருவரின் முக வெளிப்பாடுகளைப் பார்த்த கரீம், ஏற்கனவே ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கிறார்களா என்று கேட்டார்.

அப்போது அந்த பெண், “எனக்கு அவரை தெரியும், அவர் என் கணவர்! ” என உணர்ச்சியுடன் கூற, அதற்கு அவருடைய கணவர் சைடு,“ நான் அவளை எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன்! ” என கூறியுள்ளார்.

இதுகுறித்து கரீம் கூறுகையில், சுபத்ராவிற்கு சிறுவயதிலே திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அவருடைய கணவர் உ யிரிழந்துவிட்டார். அதன்பிறகு அவர் தந்தையின் வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்ற தந்தையின் நண்பரான சைடுவை சுபத்ராவிற்கு மிகவும் பிடித்துள்ளது. இதுபற்றி தந்தையிடம் பேசியபோது, திருமணத்திற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் சாதி மறுப்பு முறையில் பதிவு திருமணம் செய்துகொண்டு ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். 54 வயதில், சுபத்ராவின் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்த பின்னர், ஒரு வேலை தேடி சைடு வடஇந்தியாவிற்கு சென்றுள்ளார்.

அங்கே கா ணாமல் போன அவரால் வீடு திரும்புவதற்கோ, யாரையும் தொடர்பு கொள்வதற்கோ முடியவில்லை. சைடுவிற்கு வேறு எந்த உறவினர்களும் இல்லாத காரணத்தாலும், தொலைபேசி இணைப்புகளும் இல்லாததால் இருவரும் அப்போதே பிரிந்துவிட்டனர்.

அந்த நேரத்தில் சுபத்ராவின் இரண்டு குழந்தைகளும் இ றந்துவிட்டதால், சிறு வணிக நிறுவனம் ஒன்றில் தங்கி இறால் விற்கும் வேலை செய்துவந்தார். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பின்னர் கோவில் மைதானமே வாழ்க்கை என இருந்தவர் மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து தான் பொலிஸார் அவரை வெளிச்சம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளனர்.

அவர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் தான் சைடு, அப்பகுதியை வந்தடைந்து பல பகுதிகளிலும் தன்னுடைய மனைவியை தேடி திரிந்துள்ளார்.

கடை வாசல்களில் அடிக்கடி உறங்குவதை கண்ட பொலிஸார் அவரையும் அதே முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுள்ளனர்.

அப்போது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது என கரீம் கூறியுள்ளார். 88 வயதான சுபத்ராவும் சைடுவும் அந்த முதியோர் இல்லத்தில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்திருப்பது பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக கூறியுள்ளனர்.