திருமணத்திற்கு சென்ற போது நடந்த கோர விபத்து : பரிதாபமாக ப லியான இளம்தம்பதி!!

121

இளம்தம்பதி

சென்னையில் திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்த போது நடந்த கோர விபத்தில் இளம்தம்பதி பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த தமிழ்மாறன் (21) – சுவேதா (20) தம்பதி தங்களுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் நண்பர்கள் என மொத்தம் 7 பேருடன், திருமணம் ஒன்றிற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஜெனரேட்டர் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தமிழ்மாறன் மற்றும் அவருடைய மனைவி சுவேதா சம்பவ இடத்திலேயே ப லியாகினர். சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், படுகாயங்களுடன் கிடந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.