சாதனை விலைக்கு ஏலம் போன சிறுமியின் ஓவியம் : எத்தனை கோடிகள் தெரியுமா?

150

சிறுமியின் ஓவியம்

சீனாவின் ஹாங்காங் நகரில் ஓவியம் தொடர்பான ஏலம் நடைபெற்றதில் ஜப்பான் ஓவியர் யோஷிடோமொ வரைந்த ஒரு சிறுமியின் ஓவியம் 177 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் நகரில் போ ராட்டக்காரர்கள் நெருப்பும் வைத்தும் பெட்ரோல் வெ டிகுண் டுகள் வீசியும் போ ராட்டத்தில் ஈடுபடவும்,

பொலிசார் கண்ணீர் கு ண்டுகளை வீசி போ ராட்டத்தை கட்டுப்படுத்தி வரும் நிலையில் நகரின் ஒருபகுதியில் ஆசியாவின் மேட்டுகுடி மக்கள் சிலர் ஓவியம் தொடர்பான ஏலம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

போ ராட்டம் நடைபெற்றுவரும் பகுதிக்கு மிக அருகாமையிலேயே இந்த ஏலம் நடைபெற்ற அரங்கமும் அமைந்துள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் சுமார் 336 மில்லியன் டொலர் திரட்ட முடியும் என நிர்வாகிகள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஞாயிறு நடந்த ஏலத்தில் ஜப்பானிய ஓவியர் Yoshitomo Nara வரைந்துள்ள ஒரு சிறுமியின் ஓவியமானது சாதனை விலைக்கு ஏலம் போயுள்ளது. இந்த ஓவியத்தின் சிறப்பு அம்சம் என்னெவென்றால் பெரிய கண்களுடன், முறைப்பது போல் நிற்கும் சிறுமியின் ஒரு கையை மறைத்து இருப்பது போல் இந்த ஓவியம் தத்ரூபமாக வரையப்பட்டிருக்கிறது.

குறித்த ஓவியத்தை சிலர் போட்டிப் போட்டுக்கொண்டு ஏலத்தை உயர்த்தினர். முடிவில் 25 மில்லியன் டொலருக்கு இந்த ஓவியம் ஏலம் போனது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஓவிய ஏலத்திலும் யோஷிடோமாவின் ஓவியம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.