மனைவி கொடுத்த உணவில் இருந்த தலைமுடி : கோபத்தில் கொ டூரமான த ண்டனையை கொடுத்த கணவன்!!

179

உணவில் இருந்த தலைமுடி

வங்கதேசத்தில் மனைவி கொடுத்த உணவில் தலை முடி தென்பட்டதால் அவர் தலையை மொட்டையடித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்காவின் ஜோய்புரட் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்ளு மொண்டல் (35). இவர் தனது 23 வயது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் பப்ளுவுக்கு அவர் மனைவி இரு தினங்களுக்கு முன்னர் உணவு மற்றும் பால் கொடுத்தார். இரண்டிலும் தலைமுடி இருந்தது. இதை பார்த்து ஆ த்திரமடைந்த பப்ளு பிளேடை எடுத்து மனைவியின் தலையை வலுகட்டாயமாக மொட்டையடித்தார்.

பப்ளுவின் இரக்கமற்ற கொடூர செயல் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பப்ளுவை கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில் மனைவிக்கு க டுமையான கா யத்தை ஏற்படுத்திய பிரிவில் பப்ளு மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இந்த குற்றத்துக்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறியுள்ளனர்.