தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை தீட்டி வரும் 8 வயது சிறுமி : மனதை கலங்கடிக்கும் பின்னணி!!

294

8 வயது சிறுமி

ஸ்காட்லாந்தில் 8 வயது சிறுமிக்கு புற்றுநோய் இருப்பது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டங்களை வகுத்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டார்சி மெக்குயிர் (8) என்ற சிறுமிக்கு chordoma ரக புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கடந்த ஜனவரி மாதம் உறுதி செய்தனர். அவர் சில மாதங்களில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிய நிலையிலும் டார்சி நோயை எதிர்த்து போராடி வருகிறார்.

இது குறித்து பேசிய டார்சியின் தாய் கரோல் டொனால்டு, டார்சிக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முதுகில் சிறிய கட்டி தோன்றியது. இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற போது அது சாதாரண கட்டி தான் என கூறினார்கள்.

பின்னர் அடிக்கடி அவளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இந்நிலையில் கடந்தாண்டு மீண்டும் உடலில் கட்டிகள் வந்த போதும் பயப்பட எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறினர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தினமும் டார்சி வீட்டில் மயங்கிய நிலையில் அவளுக்கு எல்லா வித பரிசோதனைகளும் செய்யப்பட்டது. அப்போது தான் அவளுக்கு chordoma புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

நோயானது முற்றியதோடு அவளின் நுரையீரல், கைகள், காள்கள், எலும்புகளிலும் பரவியது. இதனால் அவர் விரைவில் உ யிரிழந்துவிடுவாள் என மருத்துவர்கள் கூறினர். அவளுக்கு இந்த நோய் வந்ததை முன்னரே கண்டுபிடித்திருந்தால் இதிலிருந்து மீட்டிருக்க முடியும்.

நான் அவளிடம் எதையும் மறைக்கவில்லை, அவள் விரைவில் இறந்துவிடுவாள் என அவளுக்கே தெரியும். இதையடுத்து தனது இறுதிச்சடங்குக்கு தானே திட்டத்தை வகுத்து கொடுத்து வருகிறார் டார்சி.

முதலிலேயே அவளுக்கு புற்றுநோய் இருப்பதை ஏன் அறியமுடியவில்லை என மருத்துவர்களுக்கே தெரியவில்லை என கூறியுள்ளார். டார்சி தனது நேரத்தை வீட்டிலும், மருத்துவமனையிலும் தொடர்ந்து செலவழித்து வருகிறார். அவளுக்கு குடும்பத்தார் தொடர்ந்து ஓன்லைன் மூலம் நிதி வசூல் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.