எனக்கு குழந்தை பிறப்பதற்கு அவள் தடையாக இருந்தாள் : 29 வயது இளம்பெண்ணின் பகீர் வாக்குமூலம்!!

348

குழந்தை பிறப்பதற்கு..

தமிழகத்தில் மாற்றாந்தாய் மனபான்மையில் கணவரின் மகளை கொ லை செய்துவிட்டு நாடகமாடிய இளம்பெண்ணின் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவருக்கு திருமணமாகி ராகவி (6) என்ற மகள் உள்ள நிலையில் இவர் மனைவி மூன்றாண்டுகளுக்கு முன்னர் இ றந்துவிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே திருமணமான சூர்யகலா (29) என்ற பெண்ணை பார்த்திபன் மறுமணம் செய்தார். சூர்யகலாவுக்கு முதல் கணவர் மூலம் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின் குழந்தைகள் பெற்றுகொள்ள வேண்டாம், நம் குழந்தைகளுடன் வாழ்வோம் என பார்த்திபன் கூறியதை சூர்யகலா ஏற்று கொண்டார். ஆனால் சூர்யகலாவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை வெளிப்பட தொடங்கிய நிலையில் ராகவியை அ டித்து கொ டுமைப்படுத்த தொடங்கினார்.

மேலும் தனது மகனை மட்டுமே கவனித்து வந்தார், இந்நிலையில் அலுவலத்தில் இருந்த பார்த்திபனுக்கு நேற்று மாலை போன் செய்த சூர்யகலா ராகவியை கா ணவில்லை என கூறினார்.

இதனால் பதறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்த பார்த்திபனிடம், ராகவி இங்கு தான் விளையாடி கொண்டிருந்தாள், பின்னர் எங்கு சென்றார் என தெரியவில்லை என கூறினார்.

இதையடுத்து பார்த்திபன் வீட்டு மொட்டைமாடிக்கு சென்று பார்த்தார். வீட்டின் பின்புறம் காலி மைதானம் புதர் மண்டி இருந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் அங்கு சென்று பார்த்தபோது உடலெங்கும் ர த்த கா யத்துடன் மகள் ராகவி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன், மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் ராகவி ஏற்கெனவே உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராகவி மாடியிலிருந்து தவறி விழுந்து இ றந்திருக்கலாம் என்கிற கோணத்தில் அக்குழந்தையின் உ டல் பி ரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இது குறித்து பொலிசார் விசாரித்த நிலையில் மாடியிலிருந்து ராகவி கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை என தெரிந்ததோடு பார்த்திபனுக்கு சூர்யகலா இரண்டாவது மனைவி என்பதால் பொலிசாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. ஆனால் அவர் அழுதபடி இருந்தார்.

இதையடுத்து சூர்யகலாவிடம் விசாரித்த போது என் குழந்தை அவள், அவளைப் போய் நானே கொ ல்வேனா? நானும் ஒரு குழந்தைக்கு தாய் என்றெல்லாம் சூர்யகலா பேசினார். ஆனால் ஒருகட்டத்தில் ராகவியை கொ ன்றதை ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ராகவியை எனக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில் நான் கர்ப்பமானேன். நமக்கு எதற்கு இன்னொரு குழந்தை நமக்குத் தான் 2 குழந்தைகள் உள்ளதே என க ருக்கலைப்பு செய்ய சொன்னார் . இதனால் என் கோ பம் ராகவி மீது திரும்பியது.

அடுத்த குழந்தை பிறப்பதற்கு தடையாக இருப்பதாக நினைத்து ராகவியைக் கொ லை செய்தேன் என கூறியுள்ளார். இதையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.