வேலை செய்யும் இடத்தில் மகனை தாய் கண்ட காட்சி : 20 ஆண்டுகளுக்கு பின் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

286

தமிழகத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன் கா ணாமல் போன மகனை தாய் கண்டுபிடித்து தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலுார் மாவட்டம், திருவாலந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர், இந்திரா. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள், இந்திராவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இ றந்துவிட்டார்.

இந்நிலையில் இவரின் மகன் மணிகண்டன் தன்னுடைய 6 வயது வயல்காட்டிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது வழி தவறி சென்றுவிட்டார்.

இதனால் இந்திரா அவரை பல இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர், பெங்களூருக்கு கட்டட வேலைக்கு சென்றுவிட்டார்.

அவர் மகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இந்திரா, தற்போது, சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அருகிலுள்ள தொழுதுாருக்கு கட்டட வேலைக்கு இந்திரா சென்றபோது, அங்கு தன் கணவரின் சாயலில் இருந்த இளைஞரும், உடன் வேலை செய்வதைக் கண்டு, ஆச்சரியமடைந்தார்.

அப்போது அவர், சிறு வயதில் கா ணாமல் போன மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், அந்த இளைஞரிடம் விசாரித்தார். அவர், தான் இம்ரான் எனவும், தந்தை அபிபுல்லா, ராமநத்தத்தில் வசிப்பதாகவும் கூறினார்.

இருப்பினும், இம்ரான் தன் மகன்தான் என உறுதியாக நம்பிய இந்திரா, ராமநத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பொலிசார் அவரை விசாரித்த போது, பல ஆண்டுகளுக்கு முன், சாலையோரத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்ற அபிபுல்லா என்பவர் மகன் போல வளர்த்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின், இந்திரா கூறிய அங்க அடையாளங்களை வைத்து, அந்த வாலிபரை பொலிசார் பரிசோதித்த போது, அவர் இந்திராவின் மகன் மணிகண்டன் என்பது உறுதியானது.

இதையடுத்து, மணிகண்டன் சம்மதத்துடன், தாய் இந்திராவோடு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

திட்டக்குடி தாலுகாவில், கிராம உதவியாளராக பணிபுரியும் அபிபுல்லா கூறுகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு சாலையோரத்தில் அழுது கொண்டிருந்த சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.

யாரும் தேடி வராததால், இம்ரான் என பெயர் வைத்து, என் மூத்த மகன் போல வளர்த்து வந்தேன். எனக்கு நான்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். இம்ரானை பிரிவது வேதனையாக உள்ளது.

மணிகண்டன் பிரிந்து செல்வதை, தாங்க முடியாத அபிபுல்லா குடும்பத்தினர் கதறி அழுதனர். 20 ஆண்டுகளுக்கு முன் கா ணாமல் போன மகன், மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், தாய் இந்திராவும் ஆனந்த கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.