இ ரத்தவெள்ளத்தில் ச டலமாக கிடந்த இளம்தம்பதி : கு ற்றவாளி கைது!!

251

இளம்தம்பதி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொ லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஜியாகாஞ் பகுதியைச் சேர்ந்தவர் போந்து கோபால் பால் (35). தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிந்து வரும் இவர், தனது மனைவி பியூட்டி மற்றும் மகன் அங்கன் ஆகியோருடன் வசித்து வந்தார்.

இவர்கள் மூவரும் கடந்த 8ஆம் திகதி தங்களின் வீட்டில் இ ரத்த வெள்ளத்தில் ச டலமாக கிடந்தனர். இந்த மூவரின் உ டலையும் கைப்பற்றிய பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கொ லை செய்யப்பட்ட கோபால் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் மத ரீதியான காரணங்களுக்காக கொ லை செய்யப்பட்டார் என முதலில் தகவல் பரவிய நிலையில் அது பொய் என தெரியவந்தது.

மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கிய இந்த கொ லைச் சம்பவம், தனிப்பட்ட பகை காரணமாகவே நடந்ததாக பொலிசார் கூறினர். இந்நிலையில் கோபால் பகுதி நேரமாக இன்சூரன்ஸ் ஏஜெண்டாக பணியாற்றிய சூழலில் அது தொடர்பிலேயே இந்த கொ லை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இது குறித்து பொலிசார் கூறுகையில், கொ லையாளியை பிடித்துவிட்டோம். அவர் முர்ஷிதபாத் பகுதியை சேர்ந்த கொத்தனார் உத்பால் பெஹ்ரா. இவர் கோபாலிடம் இரண்டு ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளார். அவை இரண்டிற்கு தவணைகளையும் கட்டியுள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட கோபால், ஒரு இன்சூரன்ஸிற்கான ரசீதை கொடுத்துவிட்டு, மற்றொன்றிற்கான ரசீதை கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே பி ரச்னை ஏற்பட்டுள்ளது. தனது பணத்தை கோபால் ஏமாற்றிவிட்டதாக உத்பால் ஆ த்திரத்தில் இருந்துள்ளார்.

இதன் காரணமாகவே அவர் கோபால் மற்றும் அவர் குடும்பத்தினரை கொ லை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.