தந்தையை விட வயது அதிகமானவரை மணந்த 10 வயது சிறுமி : பணத்துக்காக விற்கப்பட்ட அவலம்!!

725

10 வயது சிறுமி

இந்தியாவில் 10 வயது சிறுமி ஒருவர் தந்தையால் திருமணத்துக்காக ஒன்றரை லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, அவருக்கு 35 வயதான நபருடன் திருமணம் நடந்த நிகழ்வு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் மாநிலத் பனஸ்கந்தாவைச் சேர்ந்த பத்து வயது பழங்குடி சிறுமியை அசர்வாவைச் சேர்ந்த 35 வயது இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

முதல்கட்ட விசாரணையில் அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு அந்த இளைஞரிடம் விற்கப்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், திருமணம் செய்த இளைஞரின் உறவினர் வீட்டில் இருந்து அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.

இதில் கொடுமையான விடயம் என்ன வென்றால், 10 வயது சிறுமியை திருமணம் செய்தவர், அந்த சிறுமியின் தந்தையைவிட வயது மூத்தவர். இது குறித்து பேசிய பொலிசார், திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு, காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அந்த சிறுமியின் திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்தே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த வீடியோவை பார்த்த பாலன்பூர் அலுவலகத்தில் பணி புரியும் சமூக நீதித்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,

சிறுமியை திருமணம் செய்தவர் பெயர், கோவிந்த் தாகூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும், அவருக்கு 35 வயதாகிறது என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுமியின் சொந்த கிராமமான பனஸ்கந்தாவில் உள்ள தாந்தா தாலுகாவின் கெர்மல் கிராமத்துக்கு சென்று அந்த சிறுமியின் தந்தையை அடையாளம் கண்டதாகவும்,

அவரும் சிறுமியின் திருமணத்தை உறுதிப்படுத்தியதுடன், சிறுமியை தாகூர் ரூ .50,000 க்கு வாங்கிக்கொண்டார் என்றும், அதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில், அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் விலை பேசி தரகர் மூலம், விற்பனை ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் செலுத்தி திருமணம் செய்துள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1 லட்சம் திருமணத்திற்குப் பிறகு செலுத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிறுமியை திருமணம் செய்த தாகூர், ஒப்பந்தப்படி மீதமுள்ள ரூ.1 லட்சம் தர மறுத்தால், ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தாக்கரை மி ரட்டடும் வகையில், தரகர் கமார் என்பர் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் தரகர் உள்ளிட்ட மூன்று பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.