வெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக ஊருக்கு வந்த கணவன் : நடந்த விபரீதம்!!

245

நடந்த விபரீதம்

வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த சில மணி நேரத்தில் நபர் ஒருவர் கார் விபத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து உ யிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசன் முகமது (50). இவரது மனைவி சபிதா கனி (45). தம்பதியின் மகள் அமிதா பானு(13). அசன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு சென்று ஓராண்டுக்கு மேல் ஆனதால் தனது மனைவி மற்றும் இதர குடும்பத்தினரை பார்க்க அவருக்கு ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று காலை சவுதியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அசனின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் வந்த நிலையில் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை சிவா என்பவர் ஓட்டினார். காரானது உளுந்தூர்பேட்டை அடுத்த ஒலையனூர் அருகே சென்றபோது, திடீரென பின்பக்க டயர் வெடித்தது. இதில் சிவாவின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது. இந்த விபத்தில் அசன் உ டல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.

மேலும் சபிதா கனி, அமிதா பானு, உறவினர்கள் சர்புதீன் மகள் ஷலா உதயன் (24), ரகமத்துல்லா மனைவி பாத்திமா பீவி (29), இவரது மகள் ஷாகிராபானு (9), சிவா ஆகியோர் ப டுகாயத்துடன் உ யிருக்கு போ ராடிக்கொண்டிருந்தனர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபிதா கனி பரிதாபமாக இ றந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.