எனது வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகளுக்கு யார் காரணம்? மௌனம் கலைத்த நடிகை கனகா!

517

தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை கனகா, தனது வாழ்வில் இதுவரை நடந்த பிரச்சனைகள் மற்றும் தான் இறந்துவிட்டதாக வெளியான வதந்தி போன்றவற்றிக்கு தனது தந்தையே காரணம் என தெரிவித்துள்ளார்.

சினிமா வாழ்க்கையில் இருநது இத்தனை ஆண்டுகள் ஒதுங்கியிருந்த கரக்காட்டக்காரன் புகழ் நடிகை கனகா, தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் நடித்துவருகிறார்.

திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னர் இவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுவருகிறார்.

மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர் அளித்துள்ள பேட்டியில், என்னைபற்றிய வதந்திகள் வெளியானதற்கு எனது தந்தையே முக்கிய காரணம். நான் நலமுடன் இருக்கிறேன். நீண்டகாலம் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனது தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமா வாழ்க்கையில் இருந்து இதுவரை ஒதுங்கி இருந்தேன். தற்போது மீண்டும் வந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எனது வாழ்க்கையில் நடந்த அனைத்து துயரங்களுக்கும் எனது தந்தையே பொறுப்பு. எனது தாயின் வாழ்க்கையை கெடுத்த அவர், நானும் சினிமாவில் நடிக்ககூடாது என்பதற்காக என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்ப ஆரம்பித்தார்.

எனக்கு மனநலம் பாதித்துவிட்டதாகவும், எனது தாய் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் கூறி எங்களை அவமானப்படுத்தினார். மேலும் நான் போதைமருந்து பயன்படுத்துவதாகவும் கூறினார். இதன் காரணமாக அவருடன் பேசுவதை நான் நிறுத்திவிட்டேன்.

எனது தாய் இறப்பதற்கு முன்னால் எனது தந்தையால் அதிக கஷ்டங்களை எதிர்கொண்டார் என கூறியுள்ளார்.