இறந்த குழந்தையை பு தைக்க மண்ணை தோண்டிய போது உள்ளே உ யிருடன் மற்றொரு குழந்தை : தற்போது எப்படியுள்ளது?

414

குழந்தை

இந்தியாவில் இ றந்த குழந்தையை பு தைக்க மண்ணை தோண்டிய போது உள்ளே உ யிருடன் இருந்த கு ழந்தை ஆ பத்தான நிலையில் மீ ட்கப்பட்ட நிலையில் தற்போது அதன் உடல்நலம் தேறியதோடு எடையும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியை சேர்ந்த தம்பதிக்கு அக்டோபர் 10ஆம் திகதி குழந்தை பிறந்தது.

7வது மாதத்திலேயே அப்பெண் பிரசவித்த நிலையில், குழந்தை இ றந்து பிறந்தது. இதையடுத்து குழந்தையின் தந்தை அதன் ச டலத்தை எடுத்து கொண்டு சுடுகாட்டுக்கு சென்றார்.

அங்கு அவர் மண்வெட்டியால் மூன்று அடி ஆழத்தில் குழி தோண்டிய போது, சத்தம் ஒன்று கேட்டது. பின்னர் கையால் கவனமாக மண்ணை அள்ளியுள்ளார். உள்ளே பானை ஒன்று இருந்துள்ளது.

அதனை திறந்து பார்த்தபோது, பெண் கு ழந்தை உ யிரோடு இருந்ததைக் கண்டு அ திர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்த குழந்தை மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் அதற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

தற்போது ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சையளிக்கப்பட்டதையடுத்து குழந்தை உடல்நலம் தேறியுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அக்டோபர் மாதம் 10ஆம் திகதி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து வந்த போது வெறும் 1.1 கிலோ தான் இருந்தது.

48 மணி நேரம் குழந்தை பூமிக்கடியில் பு தைப்பட்டிருந்தும் அது உ யிருடன் இருந்தது அதிசயம் தான். தற்போது தொடர் சிகிச்சையை அடுத்து 2 கிலோ வாக எடை அதிகரித்துள்ளது.

குழந்தையின் மூளையில் சிறியளவில் தொ ற்று ஏற்பட்டுள்ளது, ஆனாலும் அதனால் எந்தவொரும் ஆபத்தும் இல்லை.

குழந்தையின் உடல்நிலை இதே போல சீராக இருந்தால் இந்த மாதம் இறுதியில் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என கூறியுள்ளனர்.

இதனிடையில் பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜேஷ் மிஸ்ரா குழந்தையை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தையை அவர் பெற்றோரே பு தைத்திருக்கலாம் என பொலிசார் தொடக்கம் முதலேயே கருதுகிறார்கள்.

ஆனால் இது தொடர்பில் யாரையும் இன்னும் பொலிசார் கண்டுபிடிக்கவில்லை, ஆனாலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.