கனவில் வந்து சொன்ன வார்த்தை : 10 அடி ஆழத்தில் சாமியார் செய்யும் ஆச்சரிய செயல்!!

294

கனவில் வந்து..

தமிழகத்தில் கனவில் தோன்றிய மகான் சொன்ன வார்த்தைக்காக, சாமியார் ஒருவர் 10 அடி ஆழ குழிக்குள் பிரார்த்தனை செய்து வரும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவரை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கு திருமணம் ஆன நிலையில், குடும்பத்தை பிரிந்து கடந்த 25 ஆண்டுகளாக துறவறம் மேற்கொண்டுள்ளார்.

அதோடு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு யோகா மற்றும் ஆன்மிக விஷயங்களையும் கற்று கொடுத்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொண்டார். அங்கு இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவருடைய கனவில் தேன்றிய மகான் ஒருவர்,

உலக நன்மைக்காக நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துள்ளார்.

இதையடுத்து அமர்நாத் புனித யாத்திரை முடிந்து சில வாரங்களுக்கு முன்பு நல்லிக்கவுண்டன்புதூர்க்கு வந்த விஸ்வநாதன் நீளமாக தாடி வளர்த்த படி ஆளே அடையாளம் தெரியாமல் வித்தியாசமாக காணப்பட்டுள்ளார்.

அவர் தன்னுடைய பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி எனவும் மாற்றிக்கொண்டார். இதையடுத்து 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து மவுன விரதம் கடைபிடிக்கப்போவதாக அங்கிருக்கும் கிராம வாசிகளிடம் கூற, ஒரு சிலர் இவர் ஏதோ நடிக்கிறார் மறுத்துள்ளனர்.

அதன் பின் திடீரென இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் நல்லிக்கவுண்டன்புதூர் வர, அவர்கள் உதவியுடன் 10 அடி ஆழ குழி தோண்டி அதில் பாதாள சிவலிங்கத்தை விஸ்வநாதன் பிரதிஷ்டை செய்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 17-ஆம் திகதி இரவு முதல் அவர் அந்த குழிக்குள் இறங்கி சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்து வருகிறார்.

பின்னர் தியானம் இருந்தபடி தனது மவுன விரதத்தை தொடங்கினார். சாமியார் மவுன விரதம் இருப்பதால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு வெள்ளைத்தாளில் பதில் எழுதி கொடுத்து வருகிறார்.

தொடர்ந்து 48 நாட்கள் குழிக்குள் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். குழிக்குள் இருந்த படி அவர் சிவலிங்கத்தை வழிபடும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக, பலரும் அவரை காண்பத்தற்கு செல்கின்றனர்.