நித்யானந்தா இந்தியாவில் ஆசிரமத்தில் தான் உள்ளார் : ரஞ்சிதாவிடம் விசாரித்தால் உண்மை தெரியும் : முன்னாள் பக்தன்!!

457

நித்யனந்தா இந்தியாவில்..

நித்யானந்தா தீவு ஒன்றை வாங்கி அங்கு செட்டில் ஆனதாக தகவல் வந்த நிலையில், நித்தியின் முன்னாள் பக்தர் ஒருவர் அவர் இந்தியாவில் தான் உள்ளார் என்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

சர்ச்சை சாமியார் நித்யானந்தாவை பொலிசார் தேடிவரும் நிலையில், அவர் குறித்து முன்னாள் பக்தர் விஜயகுமார் என்கிற விஜய நித்யானந்தா என்ற சீடர் பேசியுள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது, ”2009ஆம் ஆண்டில் பிடதி ஆசிரமத்துக்கு சென்றேன். அங்கு நித்யானந்தாவை சந்தித்து என்னுடைய பணம், தங்கம் ஆகியவை அவர் இருமடங்காக்கி தருவதாக தெரிவித்ததால் வழங்கினேன். அப்படி என்னுடைய முழு சொத்துகளையும் இழந்தேன்.

முன்னதாக, திருவாரூர், வேதாரண்யம், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள ஆசிரமத்தின் நிர்வாகத்தை கவனித்து வந்தேன். அப்போது நித்யானந்தா தரப்பினரால் தா க்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது அவரால் சட்ட ரீதியில் பல வழக்குகளை சந்தித்து வருகிறேன்.

இருபாலின சேர்க்கையானராக நித்தி, பார்வதி பரமசிவன் எனக் கூறி அழகான பெண்களை தன்னுடைய பிடிக்குள் வைத்திருக்கிறார். 2015ஆம் ஆண்டு அவ்வாறு என்னுடைய நண்பர்கள் பலரை அழைத்து பா லியல் இ ச்சையை தீர்த்துக்கொண்டார்.

நித்தியின் ஆசிரமத்தில் ராஜ மாதாவாக ரஞ்சிதா இருக்கிறார். ராணிபோல அவர் ஆசிரமத்தில் உள்ளார். முக்கிய முடிவுகள் குறித்து அவரே தன்னிடம் பேசுவார். அவரை அம்மா என்று அழைக்க கூடாது அக்கா என்றே அழைக்க வேண்டும். மாநித்தி ஆனந்த மயி என்பதுதான் அவரின் பெயர். அவர் கூறாமல் அங்கு எதுவும் அசையாது.

லைவ் வீடியோவில் நித்யானந்தா பயன்படுத்தும் பொருட்களை பார்க்கும் போது அவை பெங்களுரு பிடாதி ஆசிரமத்தில் இருந்தவை என நிச்சயம் கூறமுடியும். அங்குள்ள பாதாள அறையில் நித்தி இருந்துகொண்டு வெளிநாட்டில் இருபது போல் நாடகம் ஆடுகிறார்.

அவர் வெளிநாட்டில் தப்பி செல்ல வாய்ப்பில்லை அவர் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தை தள்ளவேண்டும் என்றாலே 10பேர் வேண்டும். அவரை கைது செய்ய வேண்டுமானால் அவருடன் இருப்பவர்களை விசாரித்தாலே போதும். பிடதி ஆசிரமம் முழுவதும் சோதனை செய்து ரஞ்சிதாவிடம் விசாரித்தால் உண்மை தெரியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.