அவமதிக்கப்பட்ட இளம் நடிகை : பாதியேயிலேயே விழாவை விட்டு கோபத்துடன் வெளியேறினார்!!

219

ரம்யா நம்பீசன்

தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா படங்களில் பாடகியாகவும், நடிகையாகவும் கலக்கி வருபவர் நடிகை ரம்யா நம்பீசன். தற்போது விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக தமிழரசன் படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பொன் ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். அப்போது ஹீரோயின் ரம்யாவை சரியாக கவனிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் மேடைக்கு கடைசியாக அழைக்கப்பட்டதோடு பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டதால் அவர் கோபமாகி பாதியிலேயே நிகழ்ச்சியை விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது.